ஒரு வார கால தடைக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

ஒரு வார கால தடைக்கு பிறகு இன்று முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-24 03:22 GMT

கோப்புப்படம் 

தென்காசி,

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் கடந்த 17-ம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி திருநெல்வேலியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பழைய குற்றாலம், பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒரு வார கால தடைக்கு பிறகு இன்று முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றால அருவி பகுதியில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தடை நீக்கப்பட்ட நிலையில் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர். மெயின் அருவியில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான பணிகள் நடைபெற்று வருவதால் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்