அகஸ்தியர் அவதார நாள் விழா கொண்டாட்டம்

பாபநாசத்தில் அகஸ்தியர் அவதார நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-09 20:38 GMT

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசத்தில் சித்தர்கள் கோட்டம் சார்பில் அகத்தியர் அவதார நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு மாலை 3 மணிக்கு அகத்தியர் தேவாரத் திரட்டு முற்றோதல் நடைபெற்றது. 5.30 மணிக்கு கோபூஜையும், 6.30 மணிக்கு சிறப்பு தீப ஆரத்தியும் நடைபெற்றது. இந்த ஆரத்தியின் போது வானில் மூன்று முறை கருடன் வட்டமிட்டு சுற்றி பின்னர் மறைந்தது. இதைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். தொடர்ந்து சிறுவர்கள், சிவ வாத்தியங்கள் வாசித்தனர். குருபூஜை, அபிஷேகம், காராம் பசு பூஜை, மகா தீப ஆரத்தி, நாக தீபம், யானை தீபம் உள்ளிட்ட 21 வகையான தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் சித்த மருத்துவ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள அகஸ்தியர் சிலைக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சர்க்கரைப் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இதையடுத்து சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் சாந்த மரியாள் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ராஜகுமாரி முன்னிலை் வகித்தார். உறைவிட மருத்துவர் ராமசாமி வரவேற்றார். சித்த மருத்துவம் மற்றும் ஆயுள் கால உலகளவிய மையத் தலைவர் செல்வசண்முகம், எழுத்தாளர் நாறும்புநாதன், மைக்கேல் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சித்த மருத்துவத்தில் பயன்கள் குறித்து பேசினார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்