கொடைக்கானலில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்

கொடைக்கானலில் வாகனங்களில் பயன்படுத்திய ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-10-14 21:00 GMT

கொடைக்கானல் பகுதியில் இயக்கப்படுகிற வாகனங்களில், அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் (காற்று ஒலிப்பான்) பயன்படுத்தப்படுவதாக புகார் வந்தது. அதன்பேரில் நேற்று பகலில் ஏரிச்சாலையை அடுத்த கலையரங்கம் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் உரிய ஆவணங்கள் உள்ளதா?, மதுபோதையில் வாகனம் இயக்கப்படுகிறதா?, ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா? என்று பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது 10 ஏர்ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஏர்ஹாரன் பொருத்தியிருந்த வாகனங்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இனி வருங்காலத்தில் ஏர்ஹாரன்களை பொருத்தக்கூடாது என்று டிரைவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டிய டிரைவர் ஒருவருக்கு போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதேபோல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வைக்கப்பட்டிருந்த சிகப்பு, ஊதா நிறங்களில் ஒளி தரும் முகப்பு விளக்குகளை அகற்ற வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்