செல்லப்பம்பட்டி சுயம்பு மகாமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு

செல்லப்பம்பட்டி சுயம்பு மகாமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு நடந்தது.

Update: 2023-10-24 19:00 GMT

நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி சுயம்பு மகாமாரியம்மன் கோவிலில் கடந்த 9 நாட்களாக நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் சாமி பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாளை முன்னிட்டு நேற்று சாமி சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும் அனைவரும் நலம் பெற வேண்டியும், உலக அமைதி சமாதானம் வேண்டியும் சிறப்பு யாகமும் நடைபெற்றது.

இதையொட்டி கல்லூரி மாணவிகள் சசிகலா மற்றும் வர்ஷினி ஆகியோருக்கும், பள்ளி மாணவி பூஜாவுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு, புத்தகம், பேனா மற்றும் பென்சில் உள்ளிட்ட கல்வி சார்ந்த பொருட்களும், பெண்கள் மற்றும் பெரியவர்களுக்கு வேட்டி- சேலை உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்