8 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
ஆம்பூர் அருகே 8 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.;
ஆம்பூர் அடுத்த ராளக்கொத்தூர் பகுதியில் பாபு என்பவரது நிலத்தில் மலைப் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனவர் முருகன், வனக்காப்பாளர் மூர்த்தி இருவரும் சுமார் 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள துருகம் காப்பு காட்டில் விட்டனர்.