கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருடிய முதியவர் கைது
கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார்.;
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நாகம்மை வீதியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1,000 திருடப்பட்டிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (60) என்பவரை கைது செய்தனர்.