அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

ராணிப்பேட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-04-25 23:52 IST

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில், தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் நேற்று மாலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் முழுவதும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 150-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்