'அரவக்குறிச்சி மக்களால் நிராகரிக்கப்பட்டவர் அண்ணாமலை' - மாணிக்கம் தாகூர் எம்.பி. விமர்சனம்

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அண்ணாமலை தன்னை தலைவர் என்று சொல்லிக் கொள்வது நியாயமாக இருக்கும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.;

Update:2023-03-08 17:27 IST

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தனக்குத் தானே தலைவர் என சொல்லிக்கொள்ளும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்று விமர்சித்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது;-

"தலைவர் என்பவர் அவர்களது சட்டமன்ற தொகுதியில் முதலில் வெற்றி பெற வேண்டும். அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலில் தோல்வியுற்றவர் என்பதை உணர வேண்டும். அவர் அரவக்குறிச்சி மக்களால் நிராகரிக்கப்பட்டவர்.

அண்ணாமலை முதலில் ஒரு சட்டமன்ற தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல் அல்லது பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று, அதன் பின்னர் தன்னை தலைவர் என்று சொல்லிக் கொள்வது நியாயமாக இருக்கும்."

இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்