அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.;

Update:2023-03-04 00:15 IST

சாயல்குடி, 

சாயல்குடி அருகே திருமாலு கந்தான் கோட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முனியசாமி தலைமை தாங்கினார். பள்ளி கல்வி குழு தலைவர் திருநாவுக்கரசு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் மோசஸ் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் ராஜேந்திர பிரசாத் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதையொட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் செஞ்சடைநாதபுரம் லிங்கராஜ், டி.கரிசல்குளம் அப்பணசாமி, டி.வேப்பங்குளம் முருகன், நிர்வாகிகள் திருஞானம், முனியசாமி, இருளாண்டி, கரை வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை சசிகலா நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்