விபத்தில் மேலும் ஒரு வாலிபர் சாவு

காவேரிப்பாக்கம் அருகே நடந்த விபத்தில் மேலும் ஒரு வாலிபர் இறந்தார்.;

Update:2023-09-04 00:00 IST

வாலாஜாபேட்டையை சேர்ந்தவர்கள் கரண் (வயது 21), சரண்குமார் (22), சுபாஷ் (20). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காவேரிப்பாக்கம் அருகே மலைமேடு என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தடுப்பு சுவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் கரண் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். சரண்குமார், சுபாஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். இந்த நிலையில் நேற்று சுபாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்