குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

வேலூரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-06-10 14:48 GMT

வேலூர்

வேலூரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டை முன்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் வரவேற்றார்.

கலெக்டரும், எம்.எல்.ஏ.வும் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஊர்வலம் மக்கான் சிக்னல் பகுதி வழியாக அண்ணாசாலையில் சென்று மீண்டும் கோட்டையை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, தொழிலாளர் உதவி ஆணையர் ஞானவேல், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா உதவி பொது மேலாளர் மோகனவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி, தேசிய குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு திட்ட இயக்குனர் ராஜபாண்டியன் மற்றும் மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்