போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

காரக்கொல்லி அரசு பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2022-11-02 18:45 GMT

பந்தலூர், 

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே காரக்கொல்லி அரசு தொடக்க பள்ளியில் சேரம்பாடி போலீசார் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி தலைமை தாங்கினார். ஆசிரியர் பத்மநாபன் வரவேற்றார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், விஜயன், சேரங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் லில்லி ஏலியாஸ் ஆகியோர் பேசும்போது, போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் சமுதாய சீர்கேடு ஏற்படுகிறது. கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் இல்லாத கிராமமாக மாற வேண்டும் என்றனர். முடிவில் ஆசிரியர் சதீஸ் நன்றி கூறினார். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்