அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.30 அடியாக உயர்வு
வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.30 அடியாக உயர்ந்தது;
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 48.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் அணைக்கு 58 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 27.30 அடியாக இருந்தது. ஆனால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. கடந்த 2 நாட்களில் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.50 அடி உயர்ந்துள்ளது. பர்கூர் மலைப்பகுதியில் தொடர்ந்து இதேபோல் மழை பெய்தால் அணையின் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.