100 வயதை கடந்த மூத்த வாக்காளருக்கு பாராட்டு சான்றிதழ்

பெரம்பலூரில் 100 வயதை கடந்த மூத்த வாக்காளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2022-10-01 19:16 GMT

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் மூத்த வாக்காளர்களை பாராட்டி வாழ்த்து சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்திய தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் வழங்கிய வாழ்த்து சான்றிதழ் நாட்டிலுள்ள மூத்த வாக்காளர்கள் அனைவருக்கும் இல்லம் தேடி அரசுத்துறை அலுவலர்கள் நேரில் சென்று சான்றிதழ் வழங்கி பாராட்டி வருகின்றனர், அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்முறையாக பெரம்பலூர் பாரதிதாசன் நகர் பகுதியில் வசித்து வரும் மூத்த வாக்காளரான 100 வயதை கடந்த அங்கப்பனுக்கு வாழ்த்து பாராட்டு சான்றிதழை, அவருடைய வீட்டிற்கு சென்று பெரம்பலூர் ஆர்.டி.ஓ. நிறைமதி வழங்கினார். கடந்த அக்டோபர் மாதம் 2-ந் தேதி தனது 100-வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார் அங்கப்பன். இவரது மனைவி ரெங்கநாயகி 80 வயதில் இறந்து விட்டார். இவர்களுக்கு 6 மகன்கள், 2 மகள்களும், 22 பேரப்பிள்ளைகளும், 17 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர். தற்பொழுது அவரது மகன் பாலசுப்பிரமணியனுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்