நயினார்கோவில் அருகே அரசு பள்ளி ஆசிரியருக்கு பிரதமர் மோடி அனுப்பிய பாராட்டு கடிதம்

நயினார்கோவில் அருகே அரசு பள்ளி ஆசிரியருக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம் அனுப்பினார்.

Update: 2023-10-25 19:00 GMT

நயினார்கோவில்

நயினார்கோவில் அருகே உள்ள காடர்ந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் துறை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் குடியரசன் (வயது 41). இவர் ஆகஸ்டு 15-ந் தேதி பரிக் பே சர்ச்சா இயக்கத்தில் மாணவர்கள் தனித்திறன் வளர்ச்சி பற்றிய கருத்துக்களை மை கவர்மெண்ட் வெப்சைட்டின் வழியாக தெரிவித்தார். சுதந்திரதின அமுத பெருவிழா கொண்டாட்டம் வரும் 25 ஆண்டுகளில் ஒவ்வொருவரின் கருத்துக்கள் கையில் எடுப்போம் என்ற தலைப்பை இந்த வெப்சைட்டில் செயல்படுத்துகிறது. இதில் ஆசிரியர் குடியரசன் 12 கருத்துக்களை மாணவர்கள் நலனுக்காக அனுப்பி இருந்தார். இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி கையெழுத்திட்ட கடிதத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆசிரியர் குடியரசன் கூறுகையில், மாணவர்களுக்கு வீடும், பள்ளியும் ஒன்றுதான் என்ற மனநிலை இருக்க வேண்டும், தேர்வு என்பது நமது தனித்திறமையை மையப்படுத்தும் இடமாக இருக்க வேண்டும், பிறர் முன்னணியில் நம்மை மதிப்பிடுவது அல்ல, வெற்றியோ தோல்வியோ இரண்டுமே மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை என்ற எண்ணம் வேண்டும் உள்ளிட்ட 12 கருத்துக்களை தெரிவித்து இருந்தேன். இதற்காக பிரதமர் மோடியிடம் இருந்து வந்த பாராட்டு கடிதம் என்னை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்