அரக்கோணம் நகரமன்ற கூட்டம்

அரக்கோணம் நகரமன்ற கூட்டம் நடந்தது.;

Update:2022-10-31 22:32 IST

அரக்கோணம் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் லதா வரவேற்றார். கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள், தங்களது வார்டில் உள்ள சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சாலை அமைப்பதற்கான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர் அதற்கு நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்