கட்டிட மேஸ்திரி மர்மச்சாவு

பாணாவரம் அருகே கட்டிட மேஸ்திரி மர்மமான முறையில் இறந்தார்.;

Update:2023-06-09 23:59 IST

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே சூரை கிராமம், குளக்கரை தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 45), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனது தங்கை ஊரான பழையபாளையம் மோட்டூர் கிராமத்திற்கு திருவிழாவிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை பழையபாளையம் மோட்டூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தின் அருகே அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்