கட்டிட மேஸ்திரி தற்கொலை

Update:2023-10-02 00:40 IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27), கட்டிட மேஸ்திரி. இவர், நேற்று முன்தினம் இரவு கொக்கு மருந்து (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்