பரமத்தி பகுதியில்குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

Update: 2023-07-23 19:00 GMT

பரமத்திவேலூர்:

பரமத்தி பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடை மற்றும் மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் கீழ் பரமத்தியில் உள்ள ஒரு பெட்டிக்கடை, கீழ்சாத்தம்பூரில் உள்ள ஒரு மளிகை கடை மற்றும் பிள்ளைகளத்தூரில் உள்ள ஒரு டீக்கடை ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.

இதில் அந்த கடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பரமத்தியை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 41), கீழ் சாத்தம்பூரை சேர்ந்த நடராஜன் (57), பிள்ளைகளத்தூரை சேர்ந்த சதீஷ்குமார் (43) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்