சூதாடிய 4 பேர் கைது

Update:2023-09-05 01:00 IST

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் காரிமங்கலம் போலீசார் ரோந்து சென்றனர். மாட்லாம்பட்டி கிராமத்தில் புளியமரத்தடியில் சூதாடி கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அதே பகுதியை சண்முகம் (வயது 59), செல்வம் (58), துரையரசன் (60), மனோகரன் (68) என்பது தெரிய வந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 450 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்