ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது
ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
எடப்பாடி:
பூலாம்பட்டி அருகே உள்ள தம்பாகவுண்டனூரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 41). இவர் ஆன்லைன் மூலம் கேரள லாட்டரிகளை விற்பனை செய்வதாக பூலாம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வடிவேலை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததை ஒப்பு கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன் மற்றும் ரூ.42 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.