கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-08-15 04:09 IST

தேவூர்:

தேவூர் அருகே பொன்னம்பாளையம் பகுதியில் வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் பொன்னம்பாளையம் கூலையன்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சுப்பிரமணி (வயது 60) என்பவரை பிடித்து தேவூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்