முன்விரோதத்தில் பூஞ்செடி கடைக்கு தீ வைத்தவர் கைது

முன்விரோதத்தில் பூஞ்செடி கடைக்கு தீ வைத்தவர் கைது

Update: 2022-08-18 18:03 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே உள்ள விட்டம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 35). பூஞ்செடி மற்றும் மண்பானை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழ்செல்வியின் கடைக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதில் கடையில் இருந்த பூஞ்செடி மண்பானைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

இதுகுறித்து தமிழ்செல்வி மொளசி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதம் காரணமாக விட்டம்பாளையத்தை சேர்ந்த குமார் (38) என்பவர் கடைக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்