அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை தாக்கி ரூ.1½ கோடி பறித்த வழக்கில் அண்ணன்-தம்பி கைது

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை தாக்கி ரூ.1½ கோடி பறித்த வழக்கில் அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தார்கள்.

Update: 2022-09-05 21:23 GMT

புஞ்சைபுளியம்பட்டி

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை தாக்கி ரூ.1½ கோடி பறித்த வழக்கில் அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தார்கள்.

ரூ.1½ கோடி பணம் பறிப்பு

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் பவானிசாகரில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தார்.

மல்லியம்பட்டிபிரிவு என்ற இடத்தில் வரும்போது காரில் திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் 6 பேர் ஈஸ்வரனை தாக்கி ரூ.1½ கோடியை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதகுறித்து ஈஸ்வரன் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை தாக்கி பணம் பறித்த 6 பேரையும் வலைவீசி தேடி வந்தார்கள்.

அண்ணன்-தம்பி கைது

இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்த பிரைட் பாலு (வயது 45), சத்தியமங்கலம் செண்பகப்புதூரை சேர்ந்த சீனிவாசன் (45) ஆகிய 2 பேரையும் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே போலீசார் கைது செய்தார்கள். அப்போது அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மீட்கப்பட்டது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த தர்மலிங்கம் (47), சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கர்ணன் (42) ஆகியோைர போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்தும் ரூ.4 லட்சம் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட கர்ணனும், தர்மலிங்கமும் அண்ணன், தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சத்தியமங்கலம் நேரு நகரை சேர்ந்தவர் உள்பட சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்