கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள ஆரியூர்பட்டி தண்ணீர் தொட்டி அருகில் நல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சேவல் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
போலீசார் பார்த்ததும் அங்கிருந்து அவர்கள் ஓடினர். இதில் திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைதான சேகரிடம் இருந்து ரூ.500 மற்றும் சேவல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.