மதுபாட்டில்களை கடத்தியவர் கைது

Update: 2023-01-25 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரப்பன் மற்றும் போலீசார் துறிஞ்சிப்பட்டி-பையர்நத்தம் சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையில் 112 மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரிடம் விசாரித்தபோது, அவர் நத்தமேடுவை சேர்ந்த தர்மன் (வயது 37) என்பதும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. தர்மனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 112 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்