ஓசூர்:
ஓசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரம் ராஜாஜி நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 23). தனியார் நிறுவன ஊழியர். இவர் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பெண் பிரவீன்குமார் பையில் இருந்த 500 ரூபாயை பறித்து கொண்டு தப்ப முயன்றார். உடனடியாக பிரவீன்குமார் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்து ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த செல்வி (41) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.