பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ்.பி.பி. காலனி பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்த, முதியவர் போலீசில் சிக்கினார். விசாரணையில் அவர் கீழ் காலனியை சேர்ந்த லட்சுமணன் (வயது 69) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.