கஞ்சா கடத்தியவர் கைது

Update:2023-05-17 00:30 IST

அரூர்:

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா மற்றும் போலீசார் பொம்மிடி ரெயில் நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார். அவரை போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 4,500 கிராம் கஞ்சா சிக்கியது. அதை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் பெங்களூருவை சேர்ந்த இம்ரான் பாஷா (வயது 34) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்