மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் பிடிபட்டனர்;

Update:2023-05-27 00:15 IST

இளையான்குடி

இளையான்குடி அருகே சாலைக்கிராமம் போலீஸ் சரகத்தில் உள்ள குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள ஊருணியில் சட்ட விரோதமாக சவுடு மணல் அள்ளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தையும், குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கண்ணதாசன் மகன் பிரவீன் (வயது21), தஞ்சை மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் விக்னேஷ் (23), குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தனபாலன் மகன் மருது ஆகிய 3 பேரையும் கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரத்தையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்