ரேஷன் அரிசி கடத்தல்; வாலிபர் கைது

ரேஷன் அரிசி கடத்தியதில் வாலிபர் கைது செய்யப்பட்டார்;

Update:2023-05-29 00:15 IST

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட குடிமைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் நேற்று காரைக்குடியை அடுத்த ஆவுடை பொய்கை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மொத்தம் 800 கிலோ எடையுள்ள 20 மூடைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் ரேஷன் அரிசியை கடத்தி வந்த சிவகங்கையை அடுத்த வாணியங்குடியை சேர்ந்த விக்கி என்ற பாண்டித்துரை (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்