வனப்பகுதியில் தீ வைத்தவர் கைது

வால்பாறையில் வனப்பகுதியில் தீ வைத்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-03-02 00:15 IST

வால்பாறை, 

பொள்ளாச்சி வனச்சரக வனத்துறையினர் ரோந்து பணியின் போது, சின்னசேலம் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி (வயது 42) என்பவரை சந்தன மரத்தை வெட்டி கடத்தியதாக கைது செய்தனர். அவரிடம் வனத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில் மறையூர் வனப்பகுதியில் இருந்து பொள்ளாச்சிக்கு சந்தன மரத்தை அக்காமலை புல்மேடு தேசிய பூங்கா வழியாக கடத்தி வந்ததும், சந்தன மரத்தை கடத்துவதற்காக வனத்துறையினரின் கவனத்தை திசை திருப்ப அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் தீ வைத்ததும் தெரியவந்தது.

ராஜீவ்காந்தி சந்தன மரக்கட்டை கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் மற்றும் வனத்துறையினர் அக்காமலை புல்மேடு தேசிய பூங்காவில் தீ வைத்து காட்டுத்தீ பரவுவதற்கு காரணமாக இருந்த ராஜீவ்காந்தி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து, அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்