நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கலையரங்கம்
நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கலையரங்கம் திறக்கப்பட்டது.;
காரியாபட்டி,
நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இந்திராநகர், கணையமறித்தான், கட்டனூர் ஆகிய பகுதிகளில் கலையரங்கம் மற்றும் பயணிகள் நிழற்குடையினை கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கு.கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் செம்பொன் நெருஞ்சி சந்திரன், மாவட்ட கவுன்சிலர் கமலிபாரதி, முன்னாள் யூனியன் தலைவர் ஜெயராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.