கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா நடந்தது.

Update: 2022-05-27 18:58 GMT

நச்சலூர், 

குளித்தலை வட்டாரம், இனுங்கூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமை தாங்கினார். நங்கவரம் துணை வேளாண்மை அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். விழாவில் வேளாண்மை துறையின் சார்பாக தேர்வு செய்யப்பட்ட 200 விவசாய பண்ணை குடும்பங்களுக்கு 100 சதவீத மானியத்தில் தலா 3 தென்னங்கன்றுகள் வீதமும், 75 சதவீதம் மானியத்தில் உளுந்து, பச்சைப்பயறு, துவரை போன்ற பயறு வகை விதைகளும், 50 சதவீதம் மானியத்தில் கைத்தெளிப்பான் மற்றும் விசைத்தெளிப்பான் வழங்கப்பட்டது.

மேலும் விவசாயிகளுக்கு, காய்கறி விதைகள், பழச்செடிகள் உள்பட பல விவசாய ஈடுபொருட்கள் வழங்கப்பட்டது. இதில் விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் அருள்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்