அஷ்டாதச புஜ மகாலெட்சுமிக்கு சிறப்பு பூஜை

விஜயதசமியையொட்டி அஷ்டாதச புஜ மகாலெட்சுமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update:2023-10-25 00:30 IST

நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் அஷ்டாதச புஜ மகாலெட்சுமி, துர்கா தேவி, சரஸ்வதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் விஜயதசமியையொட்டி நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அஷ்டாதச புஜ மகாலெட்சுமி, துர்கா தேவி, சரஸ்வதி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்