சட்டமன்ற நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய இயலாது - ஐகோர்ட்டில் சட்டமன்ற செயலாளர் பதில்
தற்போது சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய இயலாது என ஐகோர்ட்டில் சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் விளக்கம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கின் விசாரணையின் போது ,
தற்போது சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது. அணைத்து அம்சங்களையும் பரிசீலித்து சட்டமன்ற நிகழ்வுகளை படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டில் சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் விளக்கம் தெரிவித்துள்ளார்.