ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சி

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.;

Update:2023-09-20 03:45 IST

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களுக்கு கொசு ஒழிப்பு பணி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபடுவது, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுவது ஆகியன குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், கொசு ஒழிப்பு மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இதை பார்வையிட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்