கயத்தாறு அரசு பள்ளியில் 225 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

கயத்தாறு அரசு பள்ளியில் 225 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-07-28 00:15 IST

கயத்தாறு:

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2படிக்கும் மாணவ, மாணவிகள் 225 பேருக்கு அரசு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சுதா தலைமை தாங்கினார். கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ராமச்சந்திரன், ரவிக்குமார், சுப்புராஜ்,சுரேஷ், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்