சுருளி அருவியில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவியில் 2-வது நாளாக நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Update: 2023-07-07 18:45 GMT

கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இந்த அருவிக்கு ஹைவேவிஸ் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தேனி மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி ஹைவேவிஸ் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாக நேற்றும் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 2-வது நாளாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே அருவியில் நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து சீரான பிறகு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறையினர் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்