உத்தமபாளையத்தில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு

உத்தமபாளையத்தில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்;

Update:2022-07-05 22:44 IST

தேனி மாவட்டத்தில் மொத்தம் 22 பேரூராட்சிகள் உள்ளது. இந்த பேரூராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி அலுவலர்கள் சொத்து வரி உயர்வு குறித்து வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஏ, பி, சி என 3 மண்டலமாக பிரித்து அளவீடு பணி செய்தனர். இவ்வாறு அளவீடு செய்து வரி உயர்வு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகளை பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜாராம் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் இன்று உத்தமபாளையம் பேரூராட்சியில் ஆய்வு செய்தார். அப்போது வணிக நிறுவனங்களில் செய்யப்பட்ட அளவீடு பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளை நேரில் அளவீடு செய்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது உதவி பொறியாளர் ஜடாச்சரம், செயல் அலுவலர் (பொறுப்பு) ரவி, பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்