லாரி உரிமையாளர் மீது தாக்குதல்

லாரி உரிமையாளர் மீது தாக்குதல்;

Update:2022-07-20 23:27 IST

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள காவணிப்பாக்கத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 37). விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (38). இவர்கள் இருவரும் டிப்பர் லாரி வைத்துள்ளனர். கடந்த 15-ந் தேதி இரவு தனசேகரின் லாரி டிரைவர் பிரகாஷ் என்பவர் விழுப்புரம்- சாலாமேடு சாலையில் லாரியை ஓட்டி வந்தபோது எதிரே மற்றொரு லாரியில் வந்த ஜெயப்பிரகாஷ், ஏன் முகப்பு விளக்கை டிம் செய்யவில்லை எனக்கேட்டு பிரகாசை தாக்கியுள்ளார். இதையறிந்த தனசேகர், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில் தனசேகர், சாலாமேடு அங்காளம்மன் கோவில் அருகே நடந்து சென்றபோது அவரை ஜெயப்பிரகாஷ் வழிமறித்து என் மீது புகார் கொடுத்து எதுவும் செய்ய முடியாது எனக்கூறி திட்டி உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயப்பிரகாஷ் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்