ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்தவர் மீது தாக்குதல்

திருத்துறைப்பூண்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்தவர் தாக்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-10-27 19:00 GMT

திருத்துறைப்பூண்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்தவர் தாக்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐகோர்ட்டில் வழக்கு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தலைக்காடு கண்ணன் மேடு பகுதியில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அந்த பகுதியை சேர்ந்த மாதாராமன் (வயது45) என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2019-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பொதுமக்களின் எதிர்ப்புக்கு இடையே நடந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டங்களும் நடந்தன.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த மாதாராமனை நேற்று மர்ம நபர்கள் சிலர் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.

இதில் காயம் அடைந்த அவர் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்