பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு

கலவை ஆதிபராசக்தி கல்லூரியில் பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

Update: 2023-02-09 17:26 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் "பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம்" கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

துணை போலீஸ் சூப்பிரண்டு (பெண்கள் வன்கொடுமை தடுப்பு பிரிவு) கோட்டீஸ்வரன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் நிதி நிறுவன மோசடி, போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி, போலி கடன் செயலி மற்றும் சைபர் கிரைம் உதவி எண் 1930, www.cybercrime.gov.in இணையதள முகவரி குறித்த விழிப்புணர்வு, பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சரியான தொடுதல் மற்றும் தவறான தொடுதல் பற்றியும் அவ்வாறு நடைப்பெற்றால் யாரை அணுகவேண்டும் என்ற விவரமும்,

அதற்காக எந்த எந்த அலுவலகங்கள் மற்றும் குழுக்கள் செயல்படுகின்றன என்ற விவரமும் மற்றும் அந்த சமயத்தில் அணுக வேண்டிய உதவி இலவச உதவி எண் 1098 / 181 குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முகமது சாதிக், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், விஜயலட்சுமி, நிரோஷா, பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்