அரசு பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் கொத்தனார் கைது

அரசு பேருந்தில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-12-18 08:47 IST

திருவாரூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி வீட்டில் இருந்து பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். அதே பேருந்தில் மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியை சேர்ந்த கொத்தனாராக வேலை செய்து வரும் ஸ்ரீதர் (44 வயது) என்பவரும் பயணம் செய்துள்ளார்.

அப்போது பேருந்தில் கூட்டமாக இருந்ததால் இருக்கையில் அமர்ந்து இருந்த ஸ்ரீதரிடம், தனது பையை அந்த மாணவி கொடுத்துள்ளார். அப்போது அந்த மாணவிக்கு ஸ்ரீதர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து அருகில் இருந்த பயணிகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பேருந்தில் பயணித்த பயணிகள், ஸ்ரீதரை பிடித்து திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் கொத்தனார் ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்