குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு
குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.;
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மை மாநகரமாக மாற்றும் வகையில் கரூர் மாநகர மக்கள் இயக்கம் சார்பில் தாந்தோணி மலை பகுதிக்கு உட்பட்ட ராயனூர் செல்லாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், துணை மேயர் தாரணி சரவணன், நகர நல அலுவலர் லட்சியவர்னா, மாநகராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் தீமை குறித்தும் குப்பைகளை தரம் பிரித்து போடுவதின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள், துப்புரவு பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.