விழிப்புணர்வு முகாம்
வள்ளியூர் மரியா கல்லூாியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.;
வள்ளியூர்:
வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி நிறுவனத் தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுதானிய வகைகள் குறித்தும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினர். மாணவிகள் சிறுதானியங்களில் பல வகையான உணவு வகைகளை செய்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து, அதன் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர்.