வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஊர்வலம்

வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-08-14 00:43 GMT

இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய கொடி விற்பனையை அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால் வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக, ஈரோடு அஞ்சல் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நடந்தது. ஊர்வலத்துக்கு ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகர பாபு தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் தொடங்கிய ஊர்வலம், மீனாட்சி சுந்தரனார் ரோடு வழியாக பன்னீர்செல்வம் பூங்கா வந்து மீண்டும் அரசு ஆஸ்பத்திரி அருகில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகள், மூவர்ண கொடி ஏற்றுவது தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். இதில் ஈரோடு உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் ராஜூசுந்தரம், பாலசுப்பிரமணியன், தலைமை அஞ்சல் அதிகாரி அருண்குமார், வணிக வளர்ச்சி அதிகாரி சதீஸ்குமார் மற்றும் பள்ளிக்கூட, கல்லூரி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்