பா.ஜனதா விவசாய அணி ஆர்ப்பாட்டம்
பா.ஜனதா விவசாய அணி ஆர்ப்பாட்டம் நடந்தது.;
முசிறியில் பா.ஜனதா விவசாய அணி சார்பில் கைகாட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாய அணி மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். தேசிய செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.ராஜேந்திரன், நகர் மண்டல் தலைவர் தமிழ்ச்செல்வன், விவசாய அணி மாவட்ட செயலாளர் வடுகபட்டி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை கண்டித்தும், காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை கண்டித்தும் கோஷம் எழுப்பபட்டது.