கரடி அட்டகாசத்தால் வாழைகள் நாசம்
களக்காடு அருகே கரடி அட்டகாசத்தால் வாழைகள் நாசமானது.;
களக்காடு:
களக்காடு அருகே மஞ்சுவிளை பாலம்பத்து பத்துகாட்டில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் இரவில் கரடிகள் சுற்றி திரிகிறது. மேலும் கரடிகள் வாழைகளையும் நாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்த முருகன் (41), மஞ்சுவிளையை சேர்ந்த பிரைசன் (45), தங்கராஜ் (50) ஆகியோர்களுக்கு சொந்தமான 150-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரக வாழைகளை கரடி சாய்த்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. சேதப்படுத்தியுள்ளது. கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருப்பதற்கு மின்வேலி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.