பக்ரீத் சிறப்பு தொழுகை

வாணியம்பாடியில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-06-29 13:17 GMT

பக்ரீத் தொழுகை

வாணியம்பாடியில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர், வளையாம்பட்டு, நேதாஜிநகர், ஜாப்ராபாத் ஆகிய ஈத்கா மைதானங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். வாணியம்பாடி - பெரியப்பேட்டை மசூதியில் இஸ்லாமியா பெண்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

ஆலங்காயம்

வாணிடெக் நிர்வாக இயக்குனர் இக்பால்அகமது, முன்னாள் இயக்குனர் பட்டேல் முகமதுயூசுப், நகர ம.தி.மு.க. செயலாளர் அ.நாசீர்கான், காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம்பாஷா, வாணிடெக் மேலாளர் அப்துல்லா, நூருல் அமீன், முகமது பிலால் உள்பட திராளமானோர் பங்கேற்றனர்.

இதே போல் ஆலங்காயம், ஜாப்ராபாத்தில் நடைபெற்ற தொழுகையில் முன்னாள் ஊராட்சி செயலாளர் ரபிக் அஹமது, ஷமி, ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜபியுல்லா, உதயேந்திரத்தில் நடைபெற்ற தொழுகையில் ரேகான் அலி, தவுசிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாணியம்பாடி நேதாஜி நகரில் நடைபெற்ற தொழுகையில் நகர மன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது, சதாம் உசேன் அமீன், சாதிக் பாஷா உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்